இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விஷ்ணுபுரம் இலக்கிய விழா 2017

படம்
முதல் நாள் முதல் கலந்துரையாடல், எழுத்தாளர்கள் அசோக்குமார், தூயன் இருவரையும் முன்னிறுத்தி துவங்கியது. தனிமையும்,அது தரும் மன அழுத்தமும், அசோக்குமார் கதைகளில் முதன்மை பேசுபொருளாக அமைந்திருந்த தன்மை பற்றி விவாதிக்கப்பட்டது. தன் வாழ்வின் சூழலில், நோய்மையுற்ற உறவுகளின் அணுக்கமும், பொருளியல் அழுத்தமும், தனது எழுத்துகளில் இயல்பாக வெளிப்படுவதாக அசோக்குமார் கூறினார். தூயனின் ‘முகம்’ சிறுகதையில், தோட்டி சமூக சூழலின் உட்பூசலும், பன்றி வேட்டைக்கான போட்டியும், கொதி நிலை கதைகூறலுடன் விவரிக்கப்பட்டிருக்கும் தன்மையை, அதை வாசிக்கும் வாசகனான தனக்கு அந்த ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார் நவீன். மூன்று சமூகங்கள் கலந்து வாழும் மலசிய சமூக சூழலில் தமிழ் சமூகம் மீதான பொதுப்பார்வையை இந்த கதையுடன் நவீன் ஒப்பிட்டு இந்த கேள்வியை கேட்டிருந்திருக்கலாம். சுயவேதனையும், தனிமை துயரும் நிரம்பிய தூயனின் கதைகளில் ஒன்றான ‘மஞ்சள் நிற மீன்’ கதையில் வரும் சிறுவனின் பாத்திரம் , ஒரு நல்ல புகைப்பட ஆல்பத்தில் சேர்க்கப்பட்டு காலமில்லாமல் நிலைத்திருக்கும் புகைப்படம் போல மனதில் பதிந்தத

நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்

படம்
சுரேஷ் பிரதீப்பின் ‘நாயகிகள்  நாயகர்கள்’ சிறுகதை தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம்,  பெரும்பாலான கதைகள்  சிறுவர்களின் கோணங்களில் இயல்பாக அமைந்திருக்கும் தன்மை.   பெரியம்மா வீடுகளிலும், குற்றுளத்திலும்,  பார்கவி சரவணன் உறவின் நடுவிலும்,  பெண்களிடம் தோற்கவே பிறந்த இந்த ஆண்மகன்கள்,   கூடத்தின் நடுவில் வைத்த பிரதிபலிக்கும் ஆடி  போல,  தங்களை விட பெரியதாக நிகழும்  நிகழ்வுகள் முன்னின்று அவதானித்து, அவற்றை புரிந்து கொள்ள முயல்கிறார்கள் .  முடிவில் அதன் விளைவுகளோ,   முதலெழுத்து கூட எழுதப்படாத சிலேட்டில், முட்கள் கொண்டு கீறி எழுதிய கோரமான வடிவங்கள் போல அழியாமல் அவர்களின் மனதில் நிரந்தரமாக பதிந்து விடுகின்றன. இந்த தொகுப்பில்,  நான் மீண்டும்  மீண்டும் வாசித்த சிறந்த  கதை, ,  குறியீடுகளால் நிரம்பி பொருத்தமாக அமைந்திருந்த ‘சில்ற’ . கல்லூரி நண்பன் ரஞ்சித்தால்,  விடுதியில் வ‍ழங்கப்பட்ட்  ஸ்கிப்பிங்  கயிறு, மீது  மோகம் கொண்டு  அதன் மீது விருப்ப விலக்க உறவு  வைத்திருக்கும் கதைசொல்லி,  அதன் பின் காலி டப்பாவில்,  சில்றயையும் , சதுரங்க கட்டத்தின் காய்களை, கரும்பச்சை நிற  டப்பாவிலும் சேர்க்கிறான

விஷால் ராஜா - சிறுகதை தொகுப்பு - எனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்

படம்
ஒரு இளம் எழுத்தாளனின் முதல் சிறுகதை தொகுதியினை அது இட்டு சென்ற வரிசையிலேயே வாசித்ததும், வாசிப்பனுவத்தை உடனடியாக எழுத தோன்றி எழுதியதும் இதுதான் முதல் முறை. என் வாசிப்பில், விஷால் ராஜாவின் இந்த தொகுப்பின் சிறந்த கதை ‘குளிர்’. கதைக்களமாக ஒரு ஒரு ரயில் நிலையம். அங்கு காத்திருக்கும் கதைசொல்லிக்கு காலை சூழலின் குளிர்மை உடலையும் மனதையும் ஊடுருவி உறுத்துகிறது. பெண்கள் இருவர், அங்கு வந்தமர்ந்து,   ஒருவருடன் ஒருவர்  நட்புடன்  பேசிக் கொண்டு  சாமந்தி பூக்களை கோர்க்கின்றனர். அதன் பின் ஒரு காவலாளி வந்து  சிமிட்டி இருக்கையில் மிடுக்குடன் அமர்கிறார்.  கவனிப்பினை கோரும் , நடையுடன்,   வலது முன்கை கோணலாக தொடுத்திக் கொண்டு ரப்பர் போன்று ஆடிக்கொண்டு வரும் மாற்றுத் திறனாளி ஒருவர் காவலாளிக்கு நாடகத் தன்மையுடன் வணக்கமிட்டு , அவரிடம் பணம் பெற்று எதிர் டீக்கடைக்கு சென்று டீ குடிக்கிறார். கதைசொல்லியிடம் பேச்சு கொடுக்கும் காவலாளி, அவன் முன்னாள் சைக்கிள் திருடன் எனவும், அவன் கைகளை உடைத்து ஊனமாக்கியது தான்தான் எனவும்  சொல்ல கேட்டு மனம் குத்தியது போல உணர்கிறான் கதைசொல்லி.  அந்த முன்னாள் சைக்கிள் திருடன், பெண்கள

கடைசி முகம் – சிறுகதை வாசிப்பனுபவம்

கடைசி முகம் – சிறுகதை ஜெயமோகனின்  யட்சி கதைகளையும் தேவதை கதைகளையும் ஒரு வித தயக்கத்துடன்தான் வாசிக்க துவங்குவேன்  வாசிக்கும் போது தொற்றிக் கொள்ளும் பதட்டம், கதையின் போக்கில் மேலும் மேலும் பெருகும், முடித்த பின் வரும் பதைபதைப்பு அடங்க நேரமாகும். இந்த வகை புனைகதைகளின் உச்ச தருணங்களை,  வாழ்வின்  நிகழ்வுகளுக்கு நிகராக  பொருத்தி பார்த்து சிந்திக்கும் நேரங்களில், என் நேசத்துக்குறிய பெண்களிடமும்,  நான் அணுக்கத்துடன் பழகும் பெண்களிடமும், என் ஆழ்மன போர்வைக்குள் மறைத்து என்றுமே நான் அறிந்துணர விரும்பாதவைகளை, வெளியிழுத்து அப்பட்டமாக அழுத்தமாக கோடிட்டு  காட்டி விடுகின்றன. என் மனதின் இருண்மை தந்த மருட்சி விலக நாளாகும்.  அந்த நினைவிலேயே  காலமில்லாமல உழலும் போது  ஏதோ ஒருகணத்தில்,  கிணறிலிருந்து  நீர் மொண்டு, ததும்பியபடி  வரும் வாளி போல இதுநாள் வரை உணர்ந்திடாத  எண்ணங்களால் நிரம்பி மேலெழுவது போல பலமுறை தோன்றியிருக்கிறது. கடைசி முகம் கதையின் தலைப்பிலிருந்து யட்சி கதை என்று முன்னறிய முடியாததால் வாசிக்க துவங்கியவுடன்,  பொருட்காட்சியில், கட்டணம் கொடுத்து, என் தோற்றத்தை விசித்திரமாக்கி காட்டும் மாயக்க