இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைச்செல்வியின் மாயநதி - வாசிப்பனுபவம்

படம்
‘ஐந்திணை’ நிகழ்வி்ற்காக வாசித்த சிறுகதை தொகுப்புகளில் கலைச்செல்வியின் ‘மாயநதி’ ,  அதன் உள்ளடக்கம்,  வேறு வேறு கதைச்சூழல்கள் , கதைக்கருக்கள் போன்ற தன்மைகளால் பிறிதொன்றில்லாத வாசிப்பனுபவம் தந்தது. இந்த தொகுப்பின் கதைகளை,   வேளாண் நிலத்தின் மண்துகள் வாசனையை நாசியில் நிரப்பியபடி,  கால்களை அழுத்தமாக நீர் குழைத்த செம்பழுப்பு  ஈர மண்ணில் ஊன்றச் செய்த,   கதைகள்  ஒரு வகையாகவும்,  எண்ணவோட்ட சித்தரிப்பு மட்டும் முதன்மையாக அமைந்த  பிற வகைகளாகவும்  பிரிக்கலாம். இந்த வகைமைகளுக்கு வெளியே மருங்கையம்மன் போன்ற இருள்மிகுபுனைவும்(dystopian), வியாழக்கிழமை, பெரியாயி போன்ற யதார்த்தவாத  முயற்சிகள் எனவும் ஒரே அமர்வில் வாசிக்க முடிந்த சிறுகதைத் தொகுப்பு இந்த ‘மாயநதி’.   வாசிப்பின்போது  கதைக்களன்களும், பாத்திரங்களும் ஏற்கனவே வாசகன்  அறிந்தவைகளாகத் தோன்றினாலும், இந்தக் கதைகள்  தனித்துவமான நோக்கம், பார்வை, மொழிபுடன் புனையப்பட்டுள்ளன.   வறட்சியால் நீர்நிலைகள் அழிவது,  வேளாண் நிலங்கள் கைவிடப்படுவது,  குடும்ப அதிகாரப் படுகொலைகள், நோய்மையால்  முதுமையால் கைவிடப்பட்டு தனித்தவர்கள், பெண்கள் தாள நேரிடும் கு

பெருநதிக்கரை

பெருநதிக்  கரையொன்றில் கைபிணைத்து அருகமர்ந்து  அருமதி எதிர்நோக்கி அரை  துயிலிலாழ்ந்தோம் வான் நிறைத்த முகில்த் தொகை  மதி மறைத்த நேரம், கண் நிறைக்க  தங்க மின்னல் தோன்ற, நோவாகிச்  சரிந்தோம் தோள் கனக்க  எழுகையில் மின்கல்மணி மூட்டை மணி கோர்த்து சொல்லாக்கி பஞ்சாக உதிர்த்தபின் நதியா, மதியா, முகிலா, மின்னலா, மணியா, பஞ்சா, சொல்லா என்றேன் கண்கள் சிரிக்க,  ஈரடி எடுத்து முடிவருடி  அணைத்துப் பிரிந்தாய் மீண்டு வந்து  மீள மீள மீட்கும் நாட்கள் நாளை வருமோ? <நிறைவு>

வெள்ளையானையும் ஏழுதலை குதிரையும்

ஒரு புவியியல் பரப்பில்  மழைப்பொழிவின் சராசரி அளவிற்க்கும்,   அங்கு வாழும் சமூகத்தின் பயிர் வேளாண்மை, நீர்நிலை மேலாண்மைக்கும் வருடந்தோறும் நடைபெறும் மல்லுக்கட்டுப் போர்தான் ‘வறட்சி’(Drought) என்கிறார்  மைக் டேவிஸ் (Mike Davis). தனது (Late Victorian Holocaust) ‘பிற்கால விக்டோரிய அரசின் பாரிய இனப்படுகொலை’ என்னும் நூலில், அவர் மேலும் ,ஒரு முதலீட்டிய (Capitalism)சமூகத்தில்  பெருந்துயர் நேரும் போது அதன் , எந்நிலையிலிருப்பவரும் பழியை அடுத்த அடுக்கிலிருப்பவர் மீது சுமத்தி குற்றத்திற்கு பொறுப்பேற்றகாமல் தப்பிக்க இயலும் என்கிறார். ஜெயமோகன் தனது ‘வெள்ளையானை’ என்கிற வரலாற்று நாவலின் மூலம், தக்காணப் பஞ்சம் என்றழைக்கப்பட்ட   தாதுவருட வறட்சி காலத்தின் இரக்கமில்லாத களவிவரணைகளை புனைவின் துணைகொண்டு அனைத்து புலன்களையும் மொழிவழியாக நிரப்பிய அனுபவத்தினை தருகிறார். அக்கால சமூக அடுக்குகளின் பிரதிநிதிகளை முன்னிறுத்தி, அன்று நிகழ்ந்த மானுடப் பெருங்குற்றத்தின் பங்கினை அவரவர்களுக்கு பங்கிட்டுப்  பொருத்திக் கொடுத்து காலத்தின்முன் கைவிலங்கிட்டு நிற்க வைக்கிறார். இந்தியத் துணைக்கண்டத்தில்,  1876 முதல் 1878 வரையான வ

கதீட்ரலின் காமதேவன்

ஜெயமோகனின் சிறுகதையான ‘மன்மதன்’ நான் வாசித்து தீராத கதைகளில்  ஒன்றாகவே நீண்ட நாட்கள் என்னுள் இருந்து வந்தது. மற்றொரு தருணத்தில், ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் சிறுகதையை  முதன் முதலாக வாசித்த போது . அதனுடன் ஒப்பிட்டு ‘மன்மதன்’ கதையின் வாசிப்பினை விரிவாக்கலாம், என்ற எண்ணம் எழுந்தது. இந்த இரு கதைகளையும் ஒப்பிட்டு வாசித்து அறியுந்தோறும்   இந்த இரு சிறுகதைகளின் மீதான பிரமிப்பு மேலும் அதிமடங்கானது. புனைக்கதை எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் இடையே நிகழும் உணர்வு பரிமாற்றத்திற்கு பொருத்தமான சான்றாக பலமுறை ஜெயமோகன் அவர்களின் பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட கதை கதீட்ரல். கதீட்ரல் கதையின் முதன்மைப் பாத்திரமான ராபர்ட்  விழியிழந்தவர். கருப்பின அல்லது கலப்பின(coloured) பெண்ணாக  வாய்ப்பிருக்கும் தன் மனைவி இறந்தபின் வாழும் தனியர். பத்தாண்டுகளுக்கு முன்பு அவரின் வாசிப்பிற்கும் தனிவாழ்விற்கும் உதவியாளராக  உடனிருந்த முன்னாள் பணிப்பெண்ணும் மற்றும் இந்நாள் தோழியுமான பெண்ணைக் காண வருகிறார். இரு முறை தன் முகம் மீது ராபர்ட்டின் கை விரல்கள் படர்ந்துணர அனுமதித்தவர் இந்த தோழி.  மனம் கிளர்ந்த அரிதான கணங்களில் மட்டும்

ம நவீனின் வெள்ளை பாப்பாத்தி வாசிப்பனுபவம்

வெள்ளை பாப்பாத்தி சிறுவர்கள் தங்கள் உலகின் வாயிலில் நின்றபடி, பரிசுத்தமான குட்டி கைவிரல்களால் நம் பெரிய கைகளை அழுத்தமாகப் பற்றி,  நம்மை ஓயாமல் உள்நுழைய அழைக்கிறார்கள். நேரமின்மை என்கிற சல்லிசான சாக்கு கூறிக்கோண்டு, சுருங்கி சுருண்ட குழாய் போன்ற அந்த கலைடாஸ்கோப்பினை,  நம் அலட்சிய கைகளால் ஒதுக்கி கடந்து செல்கிறோம். மாறாக, நம் ‘பெரியத்தனம்’ என்னும் மன உடைகளை உதறிவிட்டு, அவர்களின் விழிமனப் பாதைக்குள் ஒப்புக் கொடுத்து,  அந்த வாயில் வழியாக தடையின்றி நுழைந்தால், முடிவிலா வண்ணக் கலவைகளால் நிறைந்த ஒரு புதிய உலகினை நாம் கண்டு அதிசயிக்க நேரும். இந்த அழகிய தேவ தேவதைகள் வாழ்வின் துளிகளை ‘அதி பெரியவைகளாக’ உருப்பெருக்கி காட்டி நம்மை வியக்க வைக்கின்றார்கள்.  என் இரண்டு வயது மகன் ரிஷிவர்தனுடன் நான் பழகிப் பெற்று வரும், குழந்தைமை ஆசியளித்த அனுபவங்களை இந்த கதை மூலம் மீண்டும் நான் காண்கிறேன். சிறுவர் பள்ளியில் போட்டியாளராகவும், அணுக்க தோழர்களாகவும் ஒன்றாகப்   படிக்கும் சிறுமியான கொடிமலரும், சிறுவனான கணபதியையும்தான் கதையின் முதன்மைப் பாத்திரங்கள். முன்பு ரப்பர் தோட்டத்தில் வேலைபார்த்த தன் தந்தை இறந்த பின் 

கரம்சோவ் சகோதரர்கள் ஊட்டி உரை 2018

படம்
மதுரை மீனாட்சி சொக்கநாதர் பேராலயத்தின் ராஜ கோபுரங்களில் பக்தி இயக்க காலத்தில் கட்டப்பட்ட கிழக்கு கோபுரம்தான்  தொன்மையானது. வடக்கு, தெற்கு ராஜ கோபுரங்கள் காலத்தால் இளையது. தெற்கு ராஜ கோபுரம் நெருக்கமான நுணுக்க சிற்பங்களால் நிரப்பப்பட்டு மற்ற கோபுரங்களை விட விரிவான கலை நயம் மிக்கது.   ஒவ்வொரு முறையும் மதுரைக்கு செல்லும்போது, தவறவே விடாமல், இந்த தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான் நான் ஆலய வழிபாட்டிற்காக நுழைவேன். சிலமுறை ஆலயத்தினுள் சென்று வழிபட எடுத்துக்கொண்ட நேரத்தை விட இந்த தெற்கு கோபுர வாயிலில் நின்று,  தலை உயர்த்தி, சிற்பங்களை பிரமிப்புடன் பார்த்த நேரக்கணக்கு அதிகம். இந்த கோபுரத்தை நிறுவிய ‘சிறுமலை செவ்வந்தி மூர்த்தி செட்டி’ ஒரு கல்வெட்டில் பெயராக அல்லது ஒரு கல்சிற்பமாக வரலாற்றில் தங்கிவிட்டாலும், இவரின் ஆத்மார்த்தமான, தார்மீக முயற்சியின் வெளிப்பாட்டால் நிறுவப்பட்ட  இந்த கோபுரத்தின் பிரம்மாண்டமும், கலைநயமும் காணுந்தோறும் கண்களை நிரப்பி, மனதினைப் பொங்கி விரிய வைக்கின்றன. பெரு்நாவல்களும் ஒரு நோக்கில்  பேராயலயங்கள்தான் எனத் தோன்றுகிறது. அப்படியானால்,  நுணுக்கமாக புனையப்பட்டு, உச்ச நெருக்கட

ஊட்டி இலக்கிய விவாத அமர்வுகள் 2018

படம்
‘Hot boxing’ என்கிற ஆங்கிலச் சொல்லினை , ஒரு சிறிய அறையினுள் சென்றமர்ந்து,  குழுவாக போதைப்பொருட்களை நுகர்ந்து, வேறெந்த நினைவினையும் அனுமதிக்காமல், போதை உணர்வினை மட்டும் அதிமடங்காக விரித்து அனுபவிப்பது  எனத் தோராயமாக வரையறுக்கலாம். ஒரு வசதியான விசாலமான அறையின் மேல்நிலையிலிருந்த, கருப்பு வெள்ளை படங்களின் தத்துவவாதிகள் சிறகுடைய தேவர்கள் போல புடைசூழ்ந்து ஆசியளிக்க, மூன்று நாட்கள் இலக்கியத்திற்காக நிகழ்ந்த ஊட்டி விவாத அமர்வுகளையும் இலக்கிய hot boxing என்பேன்.  முதல் அமர்வு பாவண்ணன் மொழியாக்கம் செய்த  சிறுகதையின் காளிபிரசாத் விமர்சன கலந்துரையாடலுடன் ஆரம்பித்தது. ‘காரணம்’ சிறுகதை கன்னட இளம் எழுத்தாளர் விக்ரம் ஹத்வாராவின் படைப்பு. எழுத்தாளனின் தன்னனுபவ விரிவாக்கமாக இருந்திருக்க சாத்தியமுள்ள இந்தக் கதை,  உள்ளடக்கத்தாலும், இறுதி முடிச்சவிழ்வதிலும், அற உணர்வு வெளிப்பாட்டிலும், வாசிப்புக் கோர்வையை தக்க வைத்ததிலும், குறிப்பிடத்தகுந்த கதையாக இருந்தது. எனினும் விமர்சன நோக்கில் சிறுகதையின் வடிவம் இந்தக் கதைக்கு பொருந்தி வரவில்லை. குறிப்பாக இதன் துவக்கம், மாகெணாவின் புறச்சூழல் விவரிப்பிலிருந்து இல்லாமல்

சிறகிழந்த பறவை

சுனீல் கிருஷ்ணனின் சிறுகதை - பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் என் முந்தைய அம்புப் படுக்கை வாசிப்பனுபவப் பதிவிற்குப் பிறகும், என் சிந்தனை அந்த தொகுப்பிலிருந்து  விலகவில்லை. கூண்டின் கொல்லனும், நாவன்னா லேன்னா செட்டியாரும் ஒரு மெல்லிய நூல் போல விடாமல் இழுக்கிறார்கள். கொல்லன் தன் பேச்சு சாதுர்யத்தால் மொத்த மக்களையும் மயக்கிப் பெற்ற,  எதிர்பார்ப்பை, செல்வாக்கினை, தன் திறனின்மையால் இழந்து விட்டு செய்வதறியாமல் விழிக்கிறான். அவனின் வெளிப்படையான கள்ள மௌனத்தையும் , அவன் சகாக்களின் அரசியல் கோமாளி நடிப்பையும், பேச்சையும் அவதானிக்கும்போது அனைவரையும் கூண்டிலிட்ட கொல்லன் நினைவு மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்கிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெரு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  கணிணி , மின்தகடு, மிண்ணணு பொருட்கள் சைனா தரத்திலிருந்து, சுமாரான தரம், உச்சபட்ச தரம் என குவிந்து கிடக்கும். ஒரு முறை அங்கு பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு 45 அல்லது 50 வயது நபர் , தவிட்டு நிற சபாரி சூட்டுடன் கண்ணாடிக் கதவினைத் திறந்து,  முகம் முழுவதையும் மறைத்த ஒளி ஊடுருவும் கறுப்ப

வெய்யிலின் ஒரு கவிதை

ஒரு பூ பூத்துச்சாம் அப்ப பாலுறிஞ்ச ஏலாத சீக்காலிப் பிள்ளையா இருந்தேனாம் அம்ம சொல்லும். கொள்ளையில் நிக்கும் கருவேலத்தூர்லதான் மார்ப்பால பீச்சி விடுமாம் முகத்துல தெறிச்சி கையெல்லாம் வழிஞ்சி தொழுவத்து சாண வாடைய மீறி பால் மணக்குமாம் வறண்ட ஆத்த பாக்குறப்பல்லாம் எதுக்குன்னே தெரியல அந்த காட்சி கண்ணுல கண்ணுல வருது மதுரை  ‘பைபாஸ் ரோடு’ மற்றும் அதன் அண்மைப் பகுதிகள்தான்,  என் சிறு, இள வயதுகளில் முழுமையாக நான் வாழந்த நிலம். அந்த  வெளிவட்ட சுற்றுச் சாலை, திருமங்கலம் வழியாக தெற்கிலிருந்து மதுரைக்கு  வரும் உந்துகள், நகர நெருக்கடிக்குள் நுழையாமல், திண்டுக்கலுக்கு, தேனிக்கு இட்டுச் செல்லும்.  இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு, கொடிக்கால் தோப்பு, வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு, என தோப்புகளால் மட்டுமே வியாபித்து செழுமையாக இருந்தது இந்தப் பகுதி,  என ஒருவரிடம் நம்ப வைக்க முயன்றால், அது அதீத கற்பனை வளம் என போற்றப்படலாம் அல்லது மனநிலை காப்பக பரிந்துரைக்கு ஆளாக நேரலாம் . கம்பிபோட்ட தள்ளுவண்டியில் பொருட்கள் வாங்கும் குளிரூட்டப்பட்ட அங்காடிகளும், மின்பொருள் அங்காடிகளும்,   மொறு மொறு வறுத்த கோழிக் கடைகளும், கண்ணாடி ம

ம நவீனின் - பேச்சி - வாசிப்பனுபவம்

படம்
ம நவீனின்  - பேச்சி பேச்சி கதை வாசிப்பின் முடிவில்,  புதிதாக தீட்டப்பட்ட தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த  உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல இருந்தது. கணிணியில் தமிழ் எழுத்துருக்களை, டைப் பதிக்கும் இந்த தலைமுறை  இளைஞனுக்கு, தன் இறப்பின் விளிம்பில் இருக்கும் சென்ற தலைமுறை அப்பா, முன்பொரு முறை நிகழ்ந்த தன் வாழ்வின் உச்சநுனித் தருணத்தைப் பகிர்கிறார். இவர்கள் உரையாடல் வழியாக கதை விரிகிறது.   வெள்ளைக்கார துரையிடம் வேலையாளாக இருந்த தன் தாத்தா, அவரளித்த துப்பாக்கியை சிரத்தையுடன் பேணியவர். வேட்டை நாய்களின் துணை கொண்டு காட்டுப்பன்றிகளை வேட்டையாடி அதன் தலைகளை மண்ணில் புதைத்து பற்களை சேகரித்தவர். இறந்த வேட்டைநாயின், ‘ரத்த சதையின் மீது கறுப்பு கம்பளி போர்த்தியது போல இருந்தது’ ‘ஒரு தேர்ந்த வீரனின் வாளைப்போல இடவலமாக சுழன்ற வாள்’, என சில நொடிக்குமுன் விபத்தில் இறந்த விலங்கின் உடலின் சதையைத் தொட்டு வெதுவதுப்பை விரல்