இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெய்யிலின் ஒரு கவிதை

ஒரு பூ பூத்துச்சாம் அப்ப பாலுறிஞ்ச ஏலாத சீக்காலிப் பிள்ளையா இருந்தேனாம் அம்ம சொல்லும். கொள்ளையில் நிக்கும் கருவேலத்தூர்லதான் மார்ப்பால பீச்சி விடுமாம் முகத்துல தெறிச்சி கையெல்லாம் வழிஞ்சி தொழுவத்து சாண வாடைய மீறி பால் மணக்குமாம் வறண்ட ஆத்த பாக்குறப்பல்லாம் எதுக்குன்னே தெரியல அந்த காட்சி கண்ணுல கண்ணுல வருது மதுரை  ‘பைபாஸ் ரோடு’ மற்றும் அதன் அண்மைப் பகுதிகள்தான்,  என் சிறு, இள வயதுகளில் முழுமையாக நான் வாழந்த நிலம். அந்த  வெளிவட்ட சுற்றுச் சாலை, திருமங்கலம் வழியாக தெற்கிலிருந்து மதுரைக்கு  வரும் உந்துகள், நகர நெருக்கடிக்குள் நுழையாமல், திண்டுக்கலுக்கு, தேனிக்கு இட்டுச் செல்லும்.  இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு, கொடிக்கால் தோப்பு, வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு, என தோப்புகளால் மட்டுமே வியாபித்து செழுமையாக இருந்தது இந்தப் பகுதி,  என ஒருவரிடம் நம்ப வைக்க முயன்றால், அது அதீத கற்பனை வளம் என போற்றப்படலாம் அல்லது மனநிலை காப்பக பரிந்துரைக்கு ஆளாக நேரலாம் . கம்பிபோட்ட தள்ளுவண்டியில் பொருட்கள் வாங்கும் குளிரூட்டப்பட்ட அங்காடிகளும், மின்பொருள் அங்காடிகளும்,   மொறு மொறு வறுத்த கோழிக் கடைகளும், கண்ணாடி ம

ம நவீனின் - பேச்சி - வாசிப்பனுபவம்

படம்
ம நவீனின்  - பேச்சி பேச்சி கதை வாசிப்பின் முடிவில்,  புதிதாக தீட்டப்பட்ட தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த  உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல இருந்தது. கணிணியில் தமிழ் எழுத்துருக்களை, டைப் பதிக்கும் இந்த தலைமுறை  இளைஞனுக்கு, தன் இறப்பின் விளிம்பில் இருக்கும் சென்ற தலைமுறை அப்பா, முன்பொரு முறை நிகழ்ந்த தன் வாழ்வின் உச்சநுனித் தருணத்தைப் பகிர்கிறார். இவர்கள் உரையாடல் வழியாக கதை விரிகிறது.   வெள்ளைக்கார துரையிடம் வேலையாளாக இருந்த தன் தாத்தா, அவரளித்த துப்பாக்கியை சிரத்தையுடன் பேணியவர். வேட்டை நாய்களின் துணை கொண்டு காட்டுப்பன்றிகளை வேட்டையாடி அதன் தலைகளை மண்ணில் புதைத்து பற்களை சேகரித்தவர். இறந்த வேட்டைநாயின், ‘ரத்த சதையின் மீது கறுப்பு கம்பளி போர்த்தியது போல இருந்தது’ ‘ஒரு தேர்ந்த வீரனின் வாளைப்போல இடவலமாக சுழன்ற வாள்’, என சில நொடிக்குமுன் விபத்தில் இறந்த விலங்கின் உடலின் சதையைத் தொட்டு வெதுவதுப்பை விரல்